மனதினில் உறுதியும், துணிவு இருந்தால்
நீரின் மேல் கூட நடக்கலாம்
நெருப்பில் கூட நீச்சல் அடிக்கலாம்
பூக்களைக் கூட பொறாமை படச் செய்யலாம்
புரட்சியைக் கூட புத்தாடையாய் அணியலாம்
பனித்துளிகளைக் கூட பரவசமாய் சேமிக்கலாம்
நண்பர்களை உயிராக உணரலாம்
விஷமிகளை வீசி ஏறியலாம்
பாசத்தை கல்வெட்டுகளாக பதிய வைக்கலாம்
நேசத்தையே நெகிழ வைக்கலாம்
வேஷத்தை தோல் உரித்து தூர எறியச் செய்யலாம்
வேகத்தை விவேகமாக்கலாம்
விவேகத்தை வீரமாக்கலாம்
வீரத்தை வெற்றியாக்கலாம்
வெற்றியை தக்க வைக்கலாம்
கொஞ்சம் முயற்சி பண்ணிதான் பார்ப்போமே!
துணிந்தவர்களுக்கு துக்கங்கள்
தலை தெரிக்க ஓடிவிடும்
துக்கத்தை தூக்கி எறிந்து…..
துணிவோடு செயல் படுவோம்
சதியை சின்னாபின்னம் ஆக்கி
கதியை கலைத்தெறிந்து
மதியுடனே செயல்பட்டால்….
விதியும் விலகி நின்று வழி கொடுக்கும்
வாருங்கள்.