ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது படைப்பு பூமி

எங்கும் எப்போதும், இப்போதும்
உலகில் எந்த ஒரு மனிதரையும்
கண்மூடித்தனமாக நம்பாதீர்கள் …..
நாளை நீ கண் மூடிவிட்டால்…
அவர்கள் உன்னை மூடி விடக்கூடும்……
உதிர்ந்த பூக்களுக்காக கண்ணீர் விடாதே.
மலர்கின்ற பூக்களுக்கு தண்ணீர் விடுவதே வாழ்க்கை
துயரங்களை ஒருபோதும் நேராக நோக்காதவன்,
மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்…
இது என்னுடையது” என்று நினைக்கும் வரை,
எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை.
“எதுவும் என்னுடையது அல்ல” என்கிற பக்குவம் வரும்போது,
விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை..
நம்முடைய உண்மை நிலையை மறைப்பது,
நம்மை நாமே ஏமாற்றி கொள்வதாக முடியும்…
குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்.
குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்…
யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் என்ற நீதி முடிவு செய்கிறது இப்போது …
பணம் சம்பதிக்கனும்னு ஆசை படுறவன் பதவிய தேடி போவான்..
மக்களுக்கு சேவை செய்யனும்னு ஆசை படுறவன பதவி தேடி வரும் எம் ஊரிலும்
ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும்.
ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக்
கூட கடிக்க முடியாது படைப்பு பூமி