மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக
மனிதன் தவறாக எண்ணுகிறான்.
அது அவன் மனதில்
தான் இருக்கிறது!
நேற்று நடந்தவற்றை உங்களால்
மாற்ற முடியாது.
நாளை
நடப்பதை தடுக்க முடியாது.
இன்றைய பொழுதில்
இக்கணத்தில் மகிழ்ச்சியாக
வாழுங்கள்.
அது தான்
எல்லா துன்பங்களுக்கும்
ஒரே தீர்வு!
உயிர் உறைந்த பின்னும் உள்ளங்களில்
மட்டும் ஜீவித்திருந்தால் போதும்.
மண் மூடிய பின்னும்
மனங்களில் மலர்ந்திருக்க வேண்டும்.
முகம் தெரியாது ஆன்மாக்களில்
ஆழமாய் முகவரி எழுதி இருக்க வேண்டும்.
இதனைவிட அழகானதாய்
வேறு எதனைத்தான் அன்பளித்துவிட முடியும்
இந்த வாழ்வு!!
விதைகள்தான் வேராக வேண்டும் என்றில்லை.
விழுதுகளும், குச்சிகளும் கூட வேராகலாம்.
விடா முயற்சி என்பதிருந்தால்
தடைகள் நம்மைத் தடுப்பதற்கு அல்ல, நாம் தாண்டும் உயரத்தைக் கூட்டுவதற்கே