இதயத் துடிப்புகளை
நிறுத்தி வைக்கிறேன்
நீ என் மார்பில்
உறங்கும் போது
உன்னருகே
பூக்களுக்கும்
இல்லையடி
வாசம்..
பேரளவில் மட்டும்
அழகி அல்ல நீ
பேரழகியும் தான்
பேரழகி மட்டும் அல்ல நீ
பெயர் அளவிலும் அழகி தான் நீ
ஒற்றைக் காலில் நின்றாடும் பூவாக
உன் ஒற்றை ஜடை இருக்க !
வண்டாக பின் தொடரும் என் மனது
சில வினாடி மூச்சுக் காற்றில்
மூர்ச்சையாக்கி செல்கிறாள்
தொலைபேசி ஊடாக
விரும்பி சிக்கிக் கொள்கிறேன்
முட் கம்பிகளிடையே !
அவள் கூந்தல்