உன் முத்தம் என் உணவாகும் ….. உன் கன்னம் என் கனவாகும்

மார்போடு உன்னை அணைக்கும்போது
பூமி நம்மை விட்டு விலகிச்செல்கிறது.
அதன் ஈர்ப்பு விசை நம்மில்
அதற்க்கு மேல் எடுபடாது.
வா ! அணைத்துக்கொண்டே சூரியனையும்
சோதித்து விட்டு வருவோ
நீ என்னை முத்தமிடும் போது
உனக்கு நான் ஈடானவனா
என்றெழும் நினைப்பு
நீ என்னைக் கோபித்துக் கொள்ளும் போது
மறைந்து போகிறது.