முத்தம்

ஒரு போதும்
உன் ஞாபக முத்தத்தை
அதன் முதல் ஸ்பரிசத்தை
ஒரு கவிதையில்
ஈடுசெய்ய முடியாது
எனினும் அதற்கே
மீண்டும் மீண்டும்
எழுதுவேன்
ஆம் அன்பே
வளரும் மூன்றாம் நாளின்
நிலவாய் உன்
உதடுகளை
பற்றுவேன் ஒருநாள்
அப்பொழுது நீ
தன்னிலை மறந்திருப்பதாய்
ஓர் புனைவு