தோளோடு தோள் சாய்ந்து.
உந்தன் வாழ்வில் துணையாக .
மறு பிறவி நான் கலந்திடவா
உறவாட வந்த என் உயிரே
எந்தன் உயிரோடு நீ கரைந்திட வா.
அலையாய் நானிருந்து
உன் பாதங்களை
முத்தமிட வந்தபோது
வெக்கப்பட்டு ஓடுவதும்
ஏனோ!!!
தூண்டி விட்டவள் நீயன்றோ
என் தூக்கம் போனதும்
நிஜமன்றோ
விழி ஏக்கம் தீர்த்தவளே
அதில் வெட்கம் கொண்டவன்
நானன்றோ!!!
உருட்டி விட்ட
தாயம் போல்
என் விழிகளும்
உன்னை தேடுதே!!!
இளநீரும் தோற்றிடுமே
உன் இதழ் நீரில்
இமைமூடி ரசிக்கின்றேன்
அந்த கனிச்சாறை!!!
சிரிக்கும் சிங்காரியே
ஒய்யாரமா நடை நடந்து
நீ போகையிலே சிக்கியதே
என் மனசு உன் இடுப்பில்!!!
வானம் பூமி கடல் காற்று நிலவு
எதுவும் மாறவில்லை
இளமை
நினைவுகளோடு வாழும்
நம்மைப்போலே!!!
No Comment! Be the first one.