உள்ளோர் பிணிக்கு உகந்த மாமருந்து
பல்லோர் தேடும் பரிகார மெய்விருந்து
இல்லார் கீயும் இரையும வளாவாள்
எல்லோரும் கொண்டாட இருக்கின்றாள் மண்மடியில்!
அழுதவிழிக்கு ஐவிரலும் தானாவாள்
அழுக்ககற்றி உள்ளத்தில் அகத்தூய்மை செய்பவளே
ஒழுக்க நெறியூட்டி ஒழுக்கத்தை காப்பவளைத்
தொழுது விளக்கேற்று தோன்றும்பல விந்தைதனும்!
வானும் மண்ணும் வளிவழியும் இடைவெளியும்
தானாகி இருக்கின்ற தர்மத்தாய் மாதா
கோனாகிக் கோளாளும் குமரித் தாயன்றோ
கூனாயும் நிமிர்த்தி குறைகளையும் பணியாலே
தேனாய் இனிக்கின்றாள் திருப்பலியும் செய்கையிலே!
தாலாட்டும் கடலோரம் தானீயக் காத்திருக்கும்
மூலக் கிருபையவள் முக்காலு முணர்ந்தவளை
வேளாங்கண்ணி வந்து வேண்டித் தலைநிமிர
நாலுமுனக்கு வரும் நல்லின்பம் கோடிவரும்!
No Comment! Be the first one.