உலகை ரட்சிக்கும் உத்தமத் தாயவளை
உள்ளமெலாம் குடிகொண்டு உறைந்திருக்கும் பூமகளை
நிலவைப் போலஒளி நித்தம் தருபவளை
வலம்வரும் மாதாவை வணங்குவர்க்கு துன்பமெது?
இரங்கும் குணமுடையாள் இறங்கிவந்து அருள்புரிவாள்
வரங்கள் கேட்டவர்க்கு வழங்கத் தவறாதாள்
நிறங்கள் பேதமின்றி நித்திலத்தில் சமப்பாடு
தருகின்ற தாயவள் தர்மத்தின் பேருருவம்!
ஏழ்மைப் பிணிபோக்க இளைத்தோரின் நலங்காக்க
வாழ்வுரிமைப் பெற்றவரின் வலியைத் தான்போக்க
ஊழ்வினையில் உழலுவர்க்கு உற்றதோர் ஆறுதலை
ஓடிவந்து அருளுபவள் உலகத்தில் மாதாவே!
குடியோர்க்காய் குடிகொண்டு குவலயத்தில் வாழுமிவள்
அடியோர்க்கும் அடிநடக்கும் அழகுத் திருப்பாதை
விடியும் பொழுதெழும் விரிக்கதிர் பேரொளி
நெடியநேர் நெஞ்சமதில் நிறைந்தப் பேரன்பு!
No Comment! Be the first one.