காசு செல்வத்தை விட
நல்ல உறவுகளை சேர்த்துவை
எல்லாம் தானே வரும்.
இது அனுபவத்தில் அப்பட்டமான பொய்

காசு செல்வத்தை சேர்த்து
வை மற்றது எல்லாம்
தானே வரும்… 

இது தான் உண்மை…!!!
வலி தரும் கடந்த நாட்களை
நினைத்து வருந்தினால்,
கடக்க போகும் நாட்கள்
வீணாக கடந்து போகும்!
நம்முடன் பழகுபவர்களில்
பலர் சிறந்த நடிகர்கள் தான்.
வார்த்தைக்கு சாயம் பூசி
வாழ்க்கையுடன்
விளையாடி விடுகின்றனர்

பாசம் வைப்பது தவறில்லை.
ஆனால், பாசத்தின் அருமை
தெரியாதவர்கள் மீது பாசம்
வைப்பது மிகப்பெரிய தவறு தான்

அழுகை தவறில்லை!
அழவைக்க நினைப்பவர்
முன் அழுகை தவறு தான்.

அனுபவசாலிகளின்
அறிவுரைகளை கேட்டுக்கொள்.
அவை உனக்கு வெற்றியை தராவிட்டாலும்,
உன் தோல்வியை தடுக்கும்.
ஆசைகளை துறந்தவர்
எல்லாம் புத்தர் என்றால்.
ஏழைகள் எல்லாம்
எல்லாம் புத்தர்கள் தானே

கொடுத்தாலும் வாங்கினாலும்
பிரச்சினை தான்.
கொடுத்தால் உறவு தேயும்.
வாங்கினால் மரியாதை தேயும்.
துன்பத்தில் தூரமாக இருந்தவன்,
இன்பத்திலும் தூரமா இருக்கட்டும்.
நெருங்க அனுமதிக்காதே…!
