பொறுமை ஒருபொழுதும்
தோற்பதில்லை.
பொறாமை ஒருபொழுதும் ஜெயிப்பதில்லை.
வாழ்க்கையில் நாம் செய்யும் இரு தவறுகள்.
பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருப்பது.
மௌனமாக இருக்க வேண்டிய நேரத்தில் பேசுவது.
வாழ்க்கையில் எதுவுமே நமக்கு மட்டுமல்ல
என்பதை உணர்ந்து கொண்டால்,
சந்தோஷங்கள் மட்டுமல்ல
துக்கங்களும் கொண்டாட்டத்திற்குரியதே.
உங்கள் கவலை, துன்பம், ரகசியம் அனைத்தையும்
இயற்கையிடம் மட்டும் பகிருங்கள். உறவுகளிடம் பகிர்ந்தால்,
உங்கள் கவலை, துன்பம், ஏமாற்றம் இரட்டிப்பு ஆகக்கூடும்.
போராடி கிடைத்தது கருவறை..!
தேடலால் கிடைத்தது வகுப்பறை..!
தேடிக் கிடைத்தது மணவறை..!
தேடாமல் கிடைக்கும் கல்லறை..!!
நீ விரும்புவதை செய்வதில்
உன் சுதந்திரம் அடங்கியுள்ளது.
நீ செய்வதை விரும்புவதில்
உன் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.
சூழ்நிலையால் மாறுகிறவர்
கண்ணீரோடு மன்னிப்புக் கேட்பார்…
சுயநலத்தால் மாறுகிறவர்
கோபத்தோடு தர்க்கம் புரிவார்கள்…!
No Comment! Be the first one.