வேளாங்கண்ணி மாதா!
பேரொளி வீசும் பெரியாள் மண்ணிடை
காராய் வருகின்றாள்
நீர்நிலைப் பெருக நிலவளம் கனிய
நிறைமழை யாகின்றாள்!
ஊருற அமைதி உலகுற சாந்தி
தேர்வலம் வருகின்றாள் தேவ மாதாதிருவிட மேகி
திருவருள் புரிகின்றாள்!
ஆலய வாசல் அடிமிதிப் போர்க்கு
அகக்குளி ரூட்டுகிறாள்
காலக் கனிவில் கர்மம் நீங்க
கருணைக் காட்டுகிறாள்!
நாளையும் இன்றும் நயம்பட நகர
நல்வழி தானானாள்
வேளாங் கண்ணி வீற்றவள் எவருக்கும்
வியப்புக்கு உள்ளானாள்!