மறந்துவிடாதே!
உனக்குள் இருக்கும் சக்தியை
மறந்துவிடாதே!
உன்னுள் புதைந்திருக்கும் திறமையை
தொலைத்துவிடாதே!
உன் முயற்சிகளை
விட்டுக்கொடுக்காதே!
நீ விழுந்ததைக்
கணக்குப் பண்ணாதே!
நீ எழுந்ததை மட்டுமே
நினைவில் வைத்திரு!
நீ தோற்றதை
எண்ணிப் புசத்தாதே!
நீ வெற்றி பெற்றதை எண்ணி
இன்னும் வெற்றிபேறு.
நீ அவமானப்பட்டதை
நினைத்து அழாதே!
நீ பெருமையடைந்ததை
நினைத்து வென்றுகாட்டு.
யாருக்கும் இங்கே நேரமில்லை !
உன்னுடைய புலம்பலைக் கேட்டு
உனக்குச் சமாதானம் சொல்ல.
உன்னுடைய தோல்விகளில்
உனக்குத் தோள் கொடுக்க.
உன்னுடைய பலவீனங்களுக்காக
உனக்கு உதவி செய்ய.
யாருக்கும் இங்கே நேரமில்லை.
இது வெல்பவர்களின் உலகம்!
இது வெல்பவர்களுக்கான உலகம்!
இங்கே தோற்றவரைக் கொண்டாடுவதில்லை!
இங்கே புலம்புவர் மதிக்கப்படுவதில்லை!
இங்கே அழுபவர் பெருமையடைவதில்லை!