நம்பிக்கை நற்கனவை நனவாக்கிவிடும்.
அவநம்பிக்கை உன் வாழ்க்கையையே கனவாக்கிவிடும்….
தோல்வி உன்னை சந்திக்க சிந்திக்கிறதா?
ஒரு கணம் நீ ஏன் தோற்றாய் என்று சிந்தி.
அதன் பிறகு உன்னை தோல்வி சந்திக்க சிந்திக்கும்.
புரியாத வாழ்க்கைப் பாதைகள்….
தொடரும் பயணங்கள் முடியும் இடம் தெரியாமல் தவிக்கும்
ஒரு மனிதனின் அதீத அன்பானது தாயிடம் மட்டுமே உள்ளது….
இழப்பு அல்லது பிரிவின்றி எவரும்
ஒன்றின் அருமையை உணருவதில்லை
மனிதனாய் பிறந்து மிருகத்தின் குணத்தைக் கொண்டிருப்பதை விட.
மிருகமாய் பிறந்து அது தன் இனத்தின் மீது
காட்டும் அன்பு போல் காட்டி வாழ்ந்து விடு ….
மனதில் பூக்கும் மல்லிகை பூ அன்பு.
அதனைத் தூக்கி குப்பையில் போட்டால் கூட நறுமணம் வீசும்.
வாழ்ந்தவனுக்கு அனுபவம் பதில் சொல்லும்
வாழ்பவனுக்கு காலம் பதில் சொல்லும்
வாழப் போறவனுக்கு மனம் பதில் சொல்லும்….
பிறரால் பிரிவுகள் ஏற்படும்போதே நீ
வெளிச்சத்தை சந்திக்கிறாய் வாழ்வில்.
வாழ்க்கையில எவ்வளவு தான் உச்சிக்கு போனாலும்
கடைசில ஒரு பெட்டிக்க தான் முடியும்