என் மாமரி இங்கு வாழ
இம்மையில் உயிர்களைக் காக்க
என்றும் நலமாய் இருந்திட உயிர்கள்
யாவரும் அவளை நோக்க!
ஒளியாய் வளியாய் ஒலியலை நிகழ்வாய்
ஒன்றி கலப்பவள் மரியே
துளியாய் மழையாய் துலங்கும் காற்றாய்
தூதாய் வருவதும் மரியே!
அன்னை மாதா அருளால் விளங்கும்
அற்புத பூமி சுழற்சி
இந்நாள் பிறந்தாள் இவளின் வரவு
ஈதே இதற்கு சாட்சி!
அன்னைப் புகழை அழகுறுத் தமிழில்
அவனியில் பாடிட வருவீர்
அண்டம் முழுதும் கொண்ட ஒளியாள்
அவளருள் பெறவே விழைவீர்!
கண்ணிரண்டில் ஞான ஒளி
கருணை மழை உள்ளத்துள்
மண்ணி ருப்போர் நலத்துக்கே
மாதாவின் அருட்பார்வை
ஆனையூர் கரையோரம்
வாசலென அடைக்கல மாதா
தங்கி யருள் பெறுவார்க்கு
தாயவளின் ஆலயமே!
நோயென வரு வார்க்கும்
நோன் பிருந்து வருவார்க்கும்
தாயென தாங்கி வரும்
தாயவளை வேண்டு வரை
வாயென வர வேற்று
வலி நீக்கும் பேரரசி
வடிவு டையாள் என் தாய்
மரியாளே!
அவள் அருள் என்றும் உங்களோடு
ஆனையூரா
No Comment! Be the first one.