பொன்னு றைந்த அழகினம்-எழிற்
பொலி வுறைந்த ஆலயம்
தண்ணி றைந்த மென்மலர்-அள்ளித்
தழுவ நழுவும் மீனினம்!
கண்ணி றைந்து நிற்கிறாள்–நித்தம்
கனவு நூறு சேர்க்கிறாள்
பெண்ணுக் கான இலக்கணத்தை–ஒரு
பெருமை யோடு காட்டுறாள்!
அழகு ராஜ கோபுரம்-காண
அழைக்கு பார் இருபுறம்
மெழுகி லான மேனி–பார்க்க
மிளிரு தந்த நிலவொளி!
அழகு ஆளும் ராணியே-சுற்றுது
ஆயிர மாய்த் தேனியே
பழகும் வாய்ப்பு யாருக்கு
படை யெடுப்போம் தேர்வுக்கு!
No Comment! Be the first one.