நாத்திகம் பேசிய நாட்களில் நம்பிக்கை என்பது கிடையாது
ஆத்திகம்பேசும் நாளில் எனக்கு ஆயுளின் கணக்கில் விடையேது?
அச்சம் வருமெனில் ஆணவம் குறையும்
ஆத்திக நம்பிகையுண்டாகும்
நிச்சயம் இளமை நேரம் இருப்பெனில்
நிமலன்நம்பிகை துண்டாகும்!
கால நேர கணக்கிலிங்கு கடவுளின் நம்பிக்கை வேறுபடும்
காளைய ராகவே இருந்தோ மென்றால் கடவுள்கொள்கை மாறுபடும்!
ஆத்திகம் நாத்திகம் அவனியில் வந்தது
அவரவர் சுயத்தினடிப்படையே
சாத்திரம் சரித்திரம் சகலமும் பார்த்தது
சார்ந்த சுயத்தின்விசித்திரமே!
No Comment! Be the first one.