கண்ணாலே கண்ணி வைத்தாள்
காதலிலே பின்னி வைத்தாள்
என்னாலே மீளஇன்னும் முடியலே
ஏனென்றும் எனக்கதுவும் புரியலே!
என்னிரவை ஏங்க வைத்தாள்
எழிற் கனவை ஓங்க வைத்தாள்
தன்னாலே புலம்புகிறேன் வழியிலே
தவிப்பதனை சொல்லுதற்கும் மொழியிலே!
உண்ணு தற்கும் முடியலே உறங்கு தற்கும் இயலிலே
கண்ணிரண்டும் சிவந்திருக்கும் நிலையிலே
காரிருளும் இரக்கமேற்று விடியலே!
என்ன வாச்சு என்னிலே
எனக்கும் குழப்பம் உள்ளிலே
திண்ண மாச்சு நினைவிலே
திருப்பமூட்ட திருமகளும் வரவிலே