தொடக்கமும் முடிவும் தொன்று தொட்டது
தொய்விடை வந்து தோன்றி நிற்பது
கடக்கும் காலம் கைகள் விட்டது
கனவாய் வாழ்வு காட்சி கொண்டது!
தேடுவ கிடைத்தால் தெய்வம் தந்தது
தேடிக் களைத்தால் தெய்வம் ஏனது?
ஆடும் மனதில் ஆட்டம் போடுது
அற்ப ஆசைகள் கூட்டம் போடுது!
ஞானம் ஒற்றைத் தெளிவி லானது
நமக்கது கிடைக்கா வகை யிலானது
ஊனம் உள்ள உறவி லானது
ஊழ் வினை என்பது பொய்யி லானது!
உலக மென்பது மாய மானது
உயிர்க ளதிலே புதிருமானது
அளவிட இயலா அளவி லானது
ஆண்டவன் தத்துவம் சக்தி யானது!
No Comment! Be the first one.