அழுதேன் கொஞ்சம் அமைதியைத் தேடி
அலைந்தேன் நித்தம் பொருளினை நாடி
தொழுதேன் கொஞ்சம் தூயவன் அடியை
தொலைத்தேன் அதனால் துயரத்தின் வலியை!
இலக்கிலா பயணம் எந்தனின் வாழ்வு
இருக்குமோ சுகமும் என்றனின் கேள்வி
பலக்கிளை பயண அனுபவ நிகழ்வு
பயணத்தின் இடையே சிறுசிறு தொய்வு!
ஓய்வுக்கு ஓய்வை
ஒதுக்கியும் தந்தேன்
ஓய்வின்றி நேரத்தை
பிதுக்கியும் சென்றேன்
காய்ந்த வெளியென
காட்சிகள் கொண்டேன்
காயாவகை மனதை
காவலும் கொண்டேன்!
அடித்தளம் அத்தனையுறுதி
அசைவிலை வாழ்வின்மிகுதி
இடித்தலும் மின்னலும்
இருந்தது பகுதி
இருந்தும் இழக்கலை
எந்தனின் தகுதி!
No Comment! Be the first one.