எண்திசை எங்கினும் பாட்டு
என் தழிழோசைக் கூட்டு-அது
உன் செவி ஒளியும் பூட்டு
உறக்கம் தவிக்கட்டும் கேட்டு!
கனிரசச் சொற்களில் தேனாய்
கலந்ததில் விட்ட பாலாய்-இரவு
பனிக் குளிரூட்டும் நேரம்
பருகிட குறையும் பாரம்!
இரவுக்கும் மயக்கம் ஊட்டும்
இனிமைக்கு வழியும் காட்டும்-அந்த
உறவுக்கும் ஏற்றது பாட்டு
உதட்டுக்கு வேலையைக் காட்டு!
சாமத்தை உசுப்பும் போதை
காமத்தை கலக்கும் பாதை-பாட்டு
ஈமத்தைத் தள்ளிப் போடும்
இளமையைக் கிள்ளி ஆடும்
No Comment! Be the first one.