வெறுமை நிறைந்த வெளியில் ஓசை
கருமை வானின் கண்களில் சிமிட்டல்
அருமைக் கடலில் அலைகளின் ஓட்டம்
அழகைக் கூட்டும் அற்புத மீன்கள்!
உழைப்போர் அடங்கி ஓடும் படகு
உன்னத வலைகள் ஓடும் படகில்
பிழைப்புக் காக பெயர்ந்தோர் கனவில்
பெரிதொரு உலகம் பேராழியின் காட்சி!
உப்புக் கடலை ஓர்த்தால் வியப்பு
ஒவ்வொரு திசையும் ஒற்றை திசையே
செப்ப நிறைய செய்திகள் உண்டு
சிறப்பை சொன்னால் சிலிர்க்கும் மெய்யே!
பூமியை விடவும் பொங்கும் கடலுள்
சாமி கொடுத்த சத்திய உயிர்கள்
நாமிதன் மகிமை நன்கு ணர்ந்தாலே
நாம் வியக்க நனி தொன்றில்லை!
சூழத் தண்ணீர் சூசகம் நிலமும்
ஆழம் அகலம் அறியா ஒன்று
வாழும் பூமிக்கு வணக்கம் செய்ய
வந்து போகும் வரிசையாய் அலைகள்!
கடலைப் போலொரு கருணை தெய்வம்
காசினி தன்னில் காண்பது அரிது
அரிதாய் தோன்றி அகிலம் நிறைந்த
ஆழிக்கு ஈடு ஆதியுமில்லை அந்தமுமில்லை
No Comment! Be the first one.