தேநீரில் முகம் பார்த்து
தேகத்தை சுளுக் கெடுத்து
தூநீரில் உடல் அலசி
தும்பை உடை தரித்து
காலை விழிப்பு தனை
கை கொள்ளும் மாந்தரினம்
நாளை கடத்து வதே
நல்ல தொரு வேலையென்பர்!
சோர்வுடுத்தி சுகம் காணும்
சோற்றுப் பிண்ட மதால்
பார்அவலம் பசி பிணி
படிணியின் அரங் கேற்றம்
போர் வரும் பின்னாளில்
பொழுதி துபோல் கழிவதனால்!
பிறப்பின் பெரும் பயனை
பிற கெங்கு தேடுவது
இருக்கும் வரை உழைத்தல்
இறவா புகழ் சேர்க்கும்
மறந்தால் மாண் பழியும்
மண்ணுக்குப் பேர ழியும்
இரந்தால் நெடு நாளும்
இழி வாகப் பேசப்படும்!