போகப்போர் எதுவரை?

 

வெட்கம் கூடு கட்டும்
வெளிர் மஞ்சள் கன்னத்தில்
வட்டமிடும் கண்ணி ரண்டும்
வாலிபத்தின் தன் னெழிலில்
ஒட்டி உள்ளம் உறவாடும்
உணர்ச்சியினால் மனங் கனியும்
தட்டிக் கழித் தகலா
தாக நதி கரைபுரளும்!

மோக முள் குத்தும்
மூண்டு வரும் கருக்கிருட்டில்
தேக உறுப் பதனை
தேடித்தேடி உணர் வெத்தும்
ஏகமும் கண் மறைக்கும்
ஏகாந்தம் உள் வரைக்கும்
போகப் போர் எதுவரைக்கும்
புலருமொளி வரும் வரைக்கும்!

காமன் கணை தொடுப்பான்
கண்டு ரதி முறுவலிப்பாள்
மாமன் மடிவந்து விழ
மாமலரும் தனை இழப்பாள்
ஆமாம் இல்லை யென
அரங் கேறும் சொற்களினால்
சாமக் கதை எழுத
சாந்தியுறும் மன மிரண்டு!