anaiyuran.com

நமதறி வறி!

 

வாழ்வின் வெளிச்சம் வெகுதூரம்
வளைந்து நெளிந்து வழிபோகும்
தாழ்வு மனமது கொள்ளாமல்
தவழ்ந்து போயும் வென்றிடலாம்
ஆழ்ந்து அறிந்து நீநடந்தால்
அரியவைக் கூட கைகளிலே
வீழ்வ தென்பது விதியல்ல
வினையாற்று வெற்றி எதிரினிலே!

கடலின் இடையே காற்றிருக்கும்
கயலு மங்கு வீற்றிருக்கும்
தடையென காற்றை எண்ணுங்கால்
தவறு;மீன்களும் கிட்டாது
உடலின் உழைப்பில் மனம்சோரா
உள்ள உணர்வில் பிழைசேரா
நடந்தால் வெற்றி அருகினிலே
நமதறி வறிவோம் முயற்சியிலே!