மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்பது நமக்குள்
விளைவது.. மற்றவர்களிடத்தில்
அதை தேட வேண்டியதில்லை..!
மகிழ்ச்சியை தேடிக்கொண்டே
இருந்தால்.. நிம்மதியை கூட
இழந்து விடுவோம்..
வாழ்க்கையை
அப்படியே ஏற்றுக் கொள்ள
கற்றுக்கொண்டால்.. மகிழ்ச்சி
தானே தேடி வரும்..!
உனக்கு யாரை பிடிக்கிறதோ
மகிழ்ச்சியுடன் பழகு..
உன்னை யாருக்கு
பிடிக்கவில்லையோ அவர்கள்
மகிழ்ச்சிக்காக விலகு..!
நம் தோல்வியில் சிலருக்கு
மகிழ்ச்சி இலாபமாக இருந்தால்..
நமக்கு அதில் கிடைத்த பாடம் தான்
இலாபமாக இருந்து விட்டு
போகட்டும்..!
நீங்கள் செய்யும் வேலையில்
நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள்..!
மகிழ்ச்சி ஒன்றையே இலக்காக
வையுங்கள்.. கிடைக்கும்
இடத்தில் பெற்றுக்கொண்டு..
கிடைக்காத இடத்தில்
கொடுத்து விட்டு செல்வோம்..!
பிறக்கும் போதே யாரும்
மகிழ்ச்சியாக பிறப்பதில்லை..
ஆனால் மகிழ்ச்சியாய் வாழும்
தகுதியுடனேயே பிறக்கிறார்கள்..