ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவுகொள்ளாது.

போகும்போதே என்னை ரசித்துகொண்டே போ,
திரும்பி வரமாட்டேன் உனக்காக.
இப்படிக்கு – வாழ்க்கை.
நம்பு, யாரையும் முழுமையாகநம்பாதே.
உன்னை மட்டும் வாழ்வில் நம்பு.
வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை.
அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்துவிட்டு போ.
உனக்கு நீ நல்லவனாய் இருந்தால்போதும்,
மற்றவருக்கு நீ கெட்டவனாய்தெரிந்தால் அது உன் குற்றம் இல்லை.
கண்ணில் பிழை என்றால் பிம்பமும்பிழையே.
யாரை நீ வெறுத்தாலும்
உன்னைமட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள்.
ஏனெனில் இந்த உலகிலேயே மிக
மிகசிறந்த காதல் உன்னை நீநேசிப்பது தான்💚
மௌனத்தில் வார்த்தைகளையும்,
கோபத்தில் அன்பையும்உணர்ந்துகொள்வது தான் உறவு;
புரிதல்இருந்தால் பிரிதல் இல்லை.
உங்கள் புன்னகையில் உள்ள சோகத்தையும்,
கோபத்தில் உள்ளகாதலையும்,
மௌனத்தில் உள்ளகாரணத்தையும் யார் புரிந்துகொள்கிறார்களோ
அவர்களேஉங்கள் அன்புக்கு உரிமை உடையவர்.
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியேலே பெருமை வேண்டும்,
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம்விரும்புகிறது,
அளந்து பேசுபவனைஅதிகம் மதிக்கிறது,
அதிகம்செயல்படுபவனையே கைகூப்பித்தொழுகிறது.
எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம்,
இன்னொன்று மௌனம்.
வாழப் பொருள் வேண்டும்,
வாழ்வதிலும்பொருள் வேண்டும்.