வெற்றியும் தோல்வியும்!

கற்றுத்தேர கண்டேன் தோல்வி
பெற்றத் தோல்வி பெரும்படிதானே
வெற்றி என்பது நிலையுமல்ல
வெற்றி மட்டும் குறியுமல்ல!

தோல்வியில் கிடைக்கும் அனுபவம்
தொடரும் இடரின் நுணுக்கம்
நாளும் நம்மை ஊக்கும்
நன்மை நாளை பயக்கும்!

எளிதாய் கிடைக்கும் வெற்றி
இலவசம் கிடைத்த எட்டி
வலிகள் பட்டு முயல
வளையும் பயனே வெற்றி!

கிலிதான் கொள்ளா முயற்சி
கிடைப்ப தற்கான பயிற்சி
எளிதிலா கிட்டும் எதுவும்
இன்பம் சுவைக்க உதவும்!