ஏற்றம் இறக்கம் வைத்தான்
எல்லோர்க்கும் புள்ளி வைத்தான்
காற்றென்ற ஒன்று தனில்
காலத்தை ஒளித்து வைத்தான்
ஆற்றல் சக்தி யொடு
ஆறறிவைக் கூட்டி வைத்தான்
ஆடும்வரை ஆடு யென்று
ஆடவிட்டு பார்த் திருந்தான்!
நாடி ஓட வைத்தான் நம்பிக்கையில் வாழ வைத்தான்
தேடிக் களைத் திருந்தும்
தேடுதற்கு தெம்ப ளித்தான்
மூடியுன் முடிவு ரையை
முன்னறியா செய்து வைத்தான்
ஈடிலா மனத ருக்குள்
இன்பத்தை புதைத்து வைத்தான்!
உயிரி ருக்கும் ரகசியத்தை
உயிரெல்லாம் ஒளித்து வைத்தான்
உயிர் வாழும் தத்துவத்தை
உடலினிலே பரப்பி வைத்தான்
அயராது அவ்வுயிரை ஆக்கியகற்றுவதை
ஆண்டவன் தன்னில் வைத்தே
ஆடுகிறான் கண் கட்டி!
No Comment! Be the first one.