வெளிநாடு

உணர்வுகள் அற்ற மனதோடு
உணர்ச்சிகள் அற்ற
மிருகங்களாக திரிகின்றோம்

உறவுகள் முறித்து இடம்
பெயர்ந்தது
காசு பணம் உயிர் காக்க
வெளிநாடு வந்தோம்

கணிணியின் முன் கண்சிமிட்டி
கைபேசியில் கரைந்த
பாச மொழி பேசுகின்றோம்

நாம் இடம் பெயர்ந்த நேரம்
நம் சந்ததிகள் தமிழ் மறக்கும்
தாய் தமிழ் மொழி
அதன் சுவடு இழக்கும்

பாசம் பொழிந்த பூமி
கலை இழக்குதடா
உன் வரவை எண்ணி
தமிழ் உயிர் துடிக்குதடா !

வராவிட்டாலும் பரவா இல்லை
தமிழாநேசம் மறக்காதே, பாசம் மறக்காதே
தேசங்கள் செல்ல உதவிய
மொழி மறக்காதே!