பொங்கும் காலம் புலர்ந்திட…..!

பொங்கும் காலம் புலர்ந்திட…..!

நஞ்சையும் புஞ்சையும் நன்னீ ராடிட
கொஞ்சி மகிழ்ந்தது காலம்-அதனில்
நஞ்சை விதைத்தது நம் சமுதாயம்
நாமடைந்தோம் அலங் கோலம்!

பஞ்சும் நெருப்பும் பக்க மிருப்பதை
பார்த்தோ மில்லை யாரும்–அந்த
பணியை தொடங்கிய
பங்காளிக்கு
பயந்தே போனோம் சோரம்!

எங்கும் வெறுமை ஏழ்மை விரிப்பு
எதனால் இந்த கோரம்–தன்
பங்கின் மகிமை பகுத்து ணராது
பதுக்கலில் காய்ந்தது ஈரம்!

பொங்கும் காலம் புலர்ந்திட இனிது
புதுமை செய்வது நன்று–அது
அங்கிங் கெண்ணா அமைவது ஒன்றால்
ஆகணும் உழைப்பால் ஒன்று!