சிதறும் காலம்!
காத்து வந்த கற்பு ஒழுக்கம்
கடைநிலை கண்டது இன்று
மூத்து நின்ற முறையும் தலையும்
மூழ்கிப்போன ஒன்று
யாத்த சட்டம் யாவும் விழலாய்
எவரும் மதிப்பது இல்லை
யாவரின் மனமும் ஏதோ வலையில்
எதற்கோ இந்த எல்லை!
விரையும் கால விரயம் நினைத்து
விழிப்பார் இல்லை இங்கு
கறைதான் படியும் காசினி யழுக்கை
களைவாராரோ அறியேன்
சிறையுள் வாழ்வாய்
சிதறும் காலம்
மறைவாய் போகுது வீணே
இறைவா இதற்கோர் வழிதான் என்ன
இரக்கம் காட்டு தானே!
No Comment! Be the first one.