பிறரை பற்றி விமர்சிக்கும் முன்னர் நாம் அவர் இடத்தில் இருந்திருந்தால் சரியாக நடந்து கொண்டிருப்போமோ என்று யோசித்து பாருங்கள்

பகையை வளர்க்காமல் எல்லோரிடமும்
பொறுத்து போகிறவர்களுக்கே இங்கு கோமாளி, முட்டாள்,
பிழைக்க தெரியாதவன் என்ற பெயர் கிடைக்கிறது.
பட்டை தீட்ட தீட்ட தானே தங்கம் உருவாகும்
அதுபோலவே வாழ்க்கையின் இன்னல்களை
கடந்து வந்தால் மட்டுமே உன்
சாதனை இந்த உலகில் நிஜமாகும்.
பணம், பொருள் என இந்த இரண்டுமே
வாழ்க்கையில் மனிதனின் சந்தர்ப்ப
சூழ்நிலைகள் மற்றும் குணத்தையே
மாற்றும் வல்லமை படைத்தது.
பிறரை பற்றி விமர்சிக்கும் முன்னர் நாம்
அவர் இடத்தில் இருந்திருந்தால்
சரியாக நடந்து கொண்டிருப்போமோ என்று
யோசித்து பாருங்கள் அதன் பின்னர் உங்கள்
மனம் சொல்லும் பிறரை பற்றி விமர்சிக்க
உமக்கு தகுதி இருக்கிறதா என்று.