பதிலுக்கு பதில் பேசுபவர்கள் அறிவாளியும் அல்ல மௌனமாய் விலகி நிற்பவர்கள் முட்டாளும் அல்ல

நாம் வாழும் வீட்டில் எத்தனை
வசதி இருக்கின்றது என்பதை விட
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம்
என்பதே முக்கியம்..!
மரம் செடியாய் இருக்கும் போது
ஆடு அதனை கடிக்கும்.. அதே செடி
மரமானதும் கடித்த ஆடு
அம்மரத்தின் நிழலில் வந்து படுத்து
உறங்கும்.. இதன் பெயர் தான்
வெற்றி..!
மனநிலை சமநிலையில்
இருப்பவர்களால் மட்டுமே
என்றுமே உயர்நிலையை
அடைய இயலும்..!
உணரும் வரை உண்மையும்
ஒரு பொய் தான்.. புரிகின்ற வரை
வாழ்க்கையும் ஒரு புதிர் தான்..!
நீ எதை வேண்டுமானாலும்
இழக்கலாம் வலி கொடியது..
தன்னம்பிக்கையை மட்டும்
இழக்காதே வாழ்க்கை பெரியது..!
பதிலுக்கு பதில் பேசுபவர்கள்
அறிவாளியும் அல்ல.. மௌனமாய்
விலகி நிற்பவர்கள்
முட்டாளும் அல்ல..!