பூஜையோ, ஜெபமோ, தொழுகையோ, ஒரு பருப்பு சோற்றை தராது விவசாயம் செய்தால் தான் சோறு

பூஜையோ,
ஜெபமோ,
தொழுகையோ,
ஒரு பருப்பு சோற்றை தராது
விவசாயம் செய்தால் தான் சோறு

உடலுக்கு குடல்
உணவாகும் போது
உடல் உணர்வதே பசி

ஆட்சி செய்பவனை
குறை சொல்வதா
இல்லை
ஆண்டவனை குறை சொல்வதா

ஆண்டவனின் படைப்பில்
அனைவரும் சமமென்றால்
ஏன் இத்தனை வேறுபாடு?

ஆயிரமாயிரம் கோடி
வைத்திருப்பவனும்
இந்த உலகில் தான்
அடுத்த வேலைக்கு
உணவில்லாமல் வாழ்பவனும்
இந்த உலகில் தான்!

பழையது
கால் வயிற்று உணவுக்கு
கூட வழியில்லாத
மனிதனை ஏன் படைக்க வேண்டும்

கடவுளின் படைப்பில்
கருணை இல்லையா?

இல்லை

கடவுளே இங்கு இல்லையா?
அவன் கணக்குத்தான் என்ன?

பிடித்த
வாழ்க்கையும்
கிடைக்காமல்

கிடைத்த
வாழ்க்கையும்
பிடிக்காமல்

வாழ்பவர்கள்
தான் இங்கு
அதிகம்