உலகின் ஆகச்சிறந்த பொக்கிஷம் – புத்தகங்கள்

என்னை உருவாக்குவது
ஆகச்சிறந்த படைப்பு.
என்னை விற்பது
ஆகச்சிறந்த யோசனை.
என்னை வாங்குவது
ஆகச்சிறந்த மூலதனம்.
என்னை நேசிப்பது
ஆகச்சிறந்த காதல்.
என்னை வாசிப்பது
ஆகச்சிறந்த சாதனை.
என்னோடு பயணிப்பது
ஆகச்சிறந்த பயணம்.
என்னோடு இருப்பது
ஆகச்சிறந்த தருணம்.
என்னோடு நட்பது
ஆகச்சிறந்த உறவு.
என் உபயோகம்
ஆகச்சிறந்த லாபம்.
ஒண்ணாப்பில் தொடங்கி
ஒன்றாக செய்கிறோம் நாம்
பயணமதை இணைந்தே.
சிலர் வாழ்வில் சில காலம்
சிலர் வாழ்வில் பல காலம்
சிலர் வாழ்வின் இறுதிவரை பிணைந்தே.
நீங்கள் பெயரிட்டீர்கள் எனக்கு புத்தகம் என