போர் வறுமைக்கு வழி காட்டுகிறது,
வறுமை தவறு செய்ய வழி காட்டுகிறது
தவறு செலவத்தை சேர்க்க வழி காட்டுகிறது
செல்வம் அகம்பாவத்திற்கு வழி காட்டுகிறது,
அகம்பாவம் அதிகாரத்திற்கு வழி காட்டுகிறது,
அதிகாரம் தண்டனைக்கு வழி காட்டுகிறது
தண்டனை பழி வாங்கும் எண்ணத்திற்கு வழி காட்டுகிறது
பழிவாங்கும் எண்ணம் மன நோய்க்கு வழி காட்டுகிறது
மன நோய் உடல் நோய்க்கு வழி காட்டுகிறது
உடல் நோய் இறப்பில் முடிகிறது
இந்த கடினமான பாதையை செப்பனிட்டு சீர்படுத்த…
சமாதானம் அமைதிக்கு வழி காட்டும்,
அமைதி ஆனந்தத்திற்கு வழி காட்டும்,
ஆனந்தம் தன்னை உணர்வதற்கு வழி காட்டும்
தன்னிலை உணர்தல் இறைநிலை உணர்வுக்கு வழி காட்டும்
இப்படி எல்லாவற்றையும் ஆழ்ந்து அனுபவிக்க
கற்றுக் கொண்டால் வாழ்வது ஒன்றும் பாரமில்லை
No Comment! Be the first one.