anaiyuran
anaiyuran

எல்லா நேரங்களில் சிலரையும், சில நேரங்களில் எல்லாரையும் மடையர் ஆக்க முடியும்

எல்லா நேரங்களில் சிலரையும்,
சில நேரங்களில் எல்லாரையும்
மடையர் ஆக்க முடியும்.
ஆனால்
எல்லா நேரங்களில் எல்லாரையும்
மடையர் ஆக்க முடியாது
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த
பாடத்தை மறந்துவிடாதே.
ஒரு மனிதன் தனது துயரத்தில் தான்
உண்மையான மனிதர்களை அறிகின்றான்
தோல்வியின் அடையாளம் “தயக்கம்”
வெற்றியின் அடையாளம் “துணிச்சல்”…
துணிந்தவர் தோற்றதில்லை,
தயங்கியவர் வென்றதில்லை!!!
துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான்
தணிப்பதும் தனிமை தான்
நண்பர்களுடன் எப்பொழுதும் விவாதம் செய்யாதே…
அதில் நீ தோற்றால் ஒரு நண்பனை இழப்பாய்.
ஜெயித்தால் ஒரு எதிரியை பெறுவாய்.!
தூக்கத்தில் உன்னைப்பற்றி நினைப்பவள் “காதலி”..
தூங்காமல் கூட உன்னையே நினைப்பவள் “தாய்”.
விட்டுக்கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்…
தட்டிக்கொடுங்கள்; தவறுகள் குறையும்….
மனம்விட்டுப்பேசுங்கள்; அன்பு பெருகும்…