ஒரு துன்பத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்..
அந்தத் துன்பத்தை வேறு யாருக்கும் கொடுக்காமல் இருப்பதே.!
பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை..
உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை.!
வெற்றியும் தோல்வியும் இரு படிகளே..
ஒன்றில் உன்னை உணர்ந்து கொள்வாய்..
மற்றொன்றில் உன்னை திருத்திக் கொள்வாய்.
அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல..
அமைவதை அழகாய் மாற்றுவதே வாழ்க்கை.
அனுபவம் என்ற பாடத்தை வாழ்க்கை கற்றுத் தருகிறது..
வாழ்க்கை என்ற பாடத்தை அனுபவம் கற்றுத் தருகிறது.
சில கவலைகளை தூர வைத்து பார்க்க பழகிக்
கொண்டால் போதும்..
வாழ்க்கை அழகாக நடை போடும்.
ஓடுகின்ற வயதில் உட்கார நினைக்காதே..
உட்காருகின்ற வயதில் நீ நினைத்தாலும் ஓட முடியாது.
பிறருக்கு எதையும் கொடுக்க முடியவில்லை
என்றாலும் மனதார வாழ்த்துங்கள்
No Comment! Be the first one.