ஆனையூரான்

நீ யோசி

நீ மற்றவர்களால் தூக்கி
எறியப்படும் ஒவ்வொரு
பொழுதும் காகிதமாக
விழாதே..! விதையாக
எழு மீண்டும்
முளைக்க..!
தள்ளாடும் வயது
வரும் முன்பு தனக்கென
சேர்த்துக் கொள்..,
தனித்து விட்டாலும்
தளராமல் தன்மானத்தோடு
தலை நிமிர்ந்து வாழலாம்..!
ஒவ்வொரு பொழுதும்
உன் தேவைகளை நீயே
நிறைவேற்றிக் கொள்
சக மனிதர்களை நம்பி
வாழாதே..! ஏதோ ஒரு
சந்தர்ப்பத்தில் அவர்களின்
சுயரூபம் வெளிப்படும்
போது மனம் உடைந்து
சிதறி விடுகின்றது..!
நீ யோசிக்காமல்
எடுக்கும் முடிவுகள்
அனைத்தும் உன்னை
யோசிக்க வைத்துக்
கொண்டே இருக்கும்
வாழ்நாள் முழுவதும்..!
மரணம் வரையில்
நினைவில் வைக்க
வேண்டியவை.. மாறும்
குணம் உடையவர்கள்
மனிதர்கள்..!