அந்தி சாயும் நேரம்
அல்ப்ஸ் மலை ஓரம்
ஊசி இலைகளை
ஊடறுத்து
நதியில் மிதந்து
மலையில் தவழ்ந்து
வானில் தோன்றிய
நிலா மங்கை!
எம்மவரும்
நம்மவரும்
மண்ணவரும்
விண்ணவரும்
அதிசயிக்க
வெண் மேகங்கள்
விலகி நின்று
சாமரை வீச
விண் நட்சத்திரங்கள்
ஒளிர்ந்து
மிளிர்ந்து
மேலும் அழகூட்ட
தேவதையாய்
நீ நடக்க
கண்ணெதிரில்
சுயம்வரமோ என
நாம் அதிசயிக்க
விண்ணில் தோன்றிய
நிலா மங்கை!
உன் அழகில்
நான் மயங்கி
உலா வந்த
உனைக்காட்டி
நிலாச்சோறு மகனுக்கோ
நான் ஊட்ட
சிணுங்கி
அடம்பிடித்து அவனோ
உனைக் கேட்க
படபடத்து நானும்
கண்ணாடி தேட
மண்ணில் என்னே
அதிசயம் நீயோ
நம் வீட்டு
முற்றத்து ஓடையில்
தோன்றிய
நிலா மங்கை!
No Comment! Be the first one.