அநியாயத்தை உலகமே சேர்ந்து நிறைவேற்றினாலும்,
அதில் நியாயம் கேட்டு மீண்டு எழ, ஒருவன் முளைத்து வருவான்.
நல்லவர்கள் மத்தியில் தீயவர்கள் புகுந்தாலும்,
தீயவர்கள் மத்தியில் ஒரு நல்லவர் புகுந்தாலும்,
அதன் விளைவுகள் வெவ்வேறாகும்.
வெற்றி என்பது பணத்தை சம்பாதிப்பது மட்டுமே அல்ல.
மகிழ்ச்சியை தொலைக்காமல் இருப்பதுவும்
பெரிய விஷயங்களை பேசுவதல்ல அனுபவம்.
சிறிய விஷயங்களை புரிந்து கொள்வதே அனுபவம்
பாசம் என்றாலே பாயாசம் தான்.
ஒன்று “தனியா” விடுவாங்க, இல்ல “தவிக்க” விடுவாங்க.
துன்பம் என்னும் கசப்பான கசாயத்தை குடம் குடமாக
குடிக்க வைத்துவிட்டு.
இன்பம் என்னும் தேனை தொட்டு நாக்கில் வைக்கிறது இந்த வாழ்க்கை.
அதிகம் நேசித்தாலும் ஆபத்து.
அதிகம் யோசிச்சாலும் ஆபத்து.
இரண்டுமே ஒருத்தரை பைத்தியம் ஆக்கிடும் வல்லமை கொண்டது