இறைவனுக்கு தெரிந்த என் எதிர்காலம்
எனக்கு தெரிந்தால் சில வேளைகளில்
என் நிகழ்காலத்தையே நான் வெறுக்ககூடும்……
பணத்திற்காக அன்பு வைக்காதே அது பாதியிலே விலகி விடும்.
அழகுக்காக அன்பு வைக்காதே அது அர்த்தமின்றி போய்விடும்.
அன்புக்காக அன்புவை அது அண்ணன் ஓவியம் போல் நிலைத்திருக்கும்…
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.
துடிக்கும்போது யாரும் கவனிக்கமாட்டார்கள்
நின்றுவிட்டால் பலரும் துடிப்பார்கள்…….
கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்
உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்;
பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்
கோபம் உன்னை நேசிப்பவர்களை கூட வெறுக்க வைக்கும்…
ஆனால் அன்பு உன்னை வெறுப்பவர்களைக் கூட நேசிக்க வைக்கும்…..
வாழ்வில் சாதிக்கவேண்டுமெனில் வேறு எதுவுமே தேவையில்லை.
முழுமையான நம்பிக்கை, தூய்மையான அன்பு, முயற்சி மட்டுமே போதும்.
வாழ்க்கை ஆயிரம் காரணங்களை நீங்கள் அழுவதற்காகத் தரும்போது,
நீங்கள் புன்னகைக்க பல காரணங்களை வாழ்க்கைக்குக் கொடுங்கள்.
இழப்பதற்க்கு ஒன்றுமே இல்லை அனால்
ஜெயிப்பதற்கு உலகமே உள்ளது
வாழும்வரை
No Comment! Be the first one.