வாழ்க்கையில் சந்தோஷம்

வாழ்க்கையில் சந்தோஷம்
என்பது யாருக்கும் தானாக
அமைவதில்லை.. நாம் தான்
அமைத்துக்கொள்ள வேண்டும்.
உலகில் அனைத்து
பிராத்தனைகளுக்கும்
பின்னால் சில ஆசைகள்
ஒளிந்திருக்கின்றன.
நம் ரசனையுடன் ஒத்து வரும்
ஒருவர் கூட நம்மை சுற்றி
இல்லாமல் இருப்பதும்
ஒருவகை தனிமையே.
யோசித்து பேசுங்கள்..
உயிர் வாழ்வது உயிர்கள்
மட்டுமல்ல
வார்த்தைகளும் தான்
வார்த்தைகளுக்கும்
உயிர் உண்டு.
நம்மில் பலரும் ஏங்கும்
வாழ்க்கை.. கண்ணை
மூடினால் தூக்கம்
வருகின்ற மாதிரி
ஒரு நிம்மதியான வாழ்க்கை
வாழ்ந்திட வேண்டும்.
துரோகிகள் மீது
நம்பிக்கை வைத்ததற்காக
வருத்தப்படாதே..நீ வைத்த
நம்பிக்கை தான் துரோகிகளை
உனக்கு காட்டிக் கொடுத்தது.
பழகிய பின் ஒருவர்
அழகாக தெரிகின்றார்
என்றால்.. அந்த அழகு
அவர்களின் குணத்தின்
வெளிப்பாடு.
வாழ்க்கையில் அதிகம்
பேசவும் கூடாது
அதே நேரத்தில்..
அமைதியாய்
இருக்கவும் கூடாது..
இரண்டுமே
வாழ்க்கையில் ஆபத்தானதே.!
எத்தனை பேர் என்ன
சொன்னாலும் நமக்கு
பிடித்தது போல் வாழ்வதில்
இருக்கிறது நமக்கான
அடையாளம்.