“மழை”

இனி உன்னை
வரவேற்பதாய்
இல்லை
ஒவ்வோரு முறையும்
உதடுகளை குவித்து ஏமாற்றுகிறாய்
மழலையைப்போல் காத்திருந்து
கடைசியில் ஏமாற்றமே மிச்சம்
சத்தங்களும் இல்லை உன் வாசமும் நூகர
முடியவில்லை
உயீர் குளிர்விப்பாய்
என்றேன்னினேன்
நீ அனலில் தவிக்கவிடுகிறாய்
இனி உன்னை வரவேர்க்கபோவதில்லை
உன் பேச்சு கா…
“மழை”

துளி விடு தூது விடுகிறாய்
நான் இன்னும்
ஒளிந்துகொண்டுதான் இருக்கிறேன்
நாம் பழம் விட்டு கொள்ள நீ இன்னும் பலமாக வா
தூளி முத்தம் போதாது எனக்கு கடலளவு

காதலோடு காத்திருக்கிறேன் நான்…
“மழை”

கண்ணாமுச்சி ஆடிக்கொண்டிருந்தோம்

சிறுபிள்ளைகளாய்
உன்னை
விரலால்
தொட்டதற்கு மின்னலாய் சிரித்து கேளி
செய்தாய்
செல்ல கோபங்கள்
கரைய தொடங்கின
இனி உச்சி முதல்
பாதம் வரை உன் சொந்தம் உயிரோடு கலந்துவிடு….
“மழை”

போதும் என்றா இல்லை தீர்ந்து விட்டதா
முத்தங்கள்
அமைதி காக்க தொடங்கினாய் நீ
வீடு செல்ல தொடங்குகிறேன் நான்
அன்னையவள்
முந்தானையில் ஒற்றி எடுத்துக்கொள்வாள்
அவளுக்கு
நான் கொடுக்க
மறந்த முத்தங்களேன….
“மழை