உன்னை தேட மறவாதே

சொர்கத்தின் இன்பத்தை அறிய,
நரகத்தின் துன்பத்தை உணர்ந்திருக்க வேண்டும்.
பத்து பேர் உதவியுடன் ஒருவனை
அடித்து வீழ்த்துவது வீரமும் அல்ல,
ராஜதந்திரமும் அல்ல.
அதன் பெயர்: சூழ்ச்சி, துரோகம்,
கோழைத்தனம்.
மனிதா மண்ணை தேடு, இல்லை பொன்னை தேடு,
இல்லை பெண்ணை தேடு, ஆனால், உன்னை
தேட மறவாதே. நீ உன்னை
தேட மறந்தால் எல்லாம் வீண்தான்.
துன்பம் என்னும் கசப்பான கசாயத்தை
குடம் குடமாக குடிக்க வைத்துவிட்டு. இன்பம் என்னும்
தேனை தொட்டு நாக்கில் வைக்கிறது இந்த வாழ்க்கை.
பிடித்த வாழ்க்கையை வாழ்வதற்கும்.
கிடைத்த வாழ்க்கையை வாழ்வதற்கும்
வித்தியாசங்கள் அதிகம்.
இரக்கம் இல்லாதவர்களிடம் இதயத்தை
கொடுத்து விட்டால், உறக்கம் இல்லா
இரவுகள் பல நமதாகிவிடும்.
ஆயிரம் பேருக்கு அறிவுரை கூறும்
அளவு அனுபவம் இருந்தாலும், தனக்கு
என்றால் தாங்க முடிவதில்லை!
நானாக இருந்தாலும்.