ஆறாம் அறிவின் அறிவென்று

தேடலொன்றை
மறைத்து
புன்னகை
கொடுத்து
தேவையோடு
காத்திருக்கிறிர்கள்,

ஆறாம் அறிவின்
அறிவென்று இதைத்தான்
சொல்லி ஏமாற்றுகிறிர்கள்

வேட்டையாடும்
விலங்கும் ஏன் !
சிறு சிறு பூச்சுகளை தேவை தென்பட்டதும்
தேடலை மறைக்காது நேரடித் தாக்குதலில்,

நீயோ மனிதனென்ற
பெயரோடு
அறிவென்னும்
முகமூடியோடு
ஆதாயம் தேடி இழக்கிறாய்
கொடுக்கிறாய் தேடுகிறாய்
நீயும் விலங்கென்பதை மறைத்து

உரிமையோடு கொடு, கேள்,

கொடுத்து கேட்காதே.