மனித வாழ்க்கை தனிமையே

மனித வாழ்க்கை தனிமையே பல
பாடங்களை கற்றுத் தருமனால்..
வாழ்நாள் முழுவதையும்
தனிமையிலே வாழ விரும்புகின்றேன்.
பல உறவுகளால் தரமுடியாத
ஆறுதலையும் நிம்மதியையும்
சில நேரம் தனிமை தந்துவிடும்
பல பாடங்களை கற்றுத் தந்து
நம்மை நாமே புரிந்து கொள்ள
நமது உற்ற நண்பனாய்
சிறந்த ஆசானாய் அமைவது தனிமை
வெற்றியோ தோல்வியோ வாழ்வில் எதையும்
சமாளிக்கும் மனஉறுதியை தருவது தனிமை தான்.
இங்கே பலருக்கும் கருவறையில் இருந்த
அமைதியையும் மனநிம்மதியையும்
தருபவையாக தனிமையே இருக்கிறது.
தனிமை அதிக வலியை தரக்கூடியது தான்
ஆனால் வாழ்வில் மனதளவில் பலமானவராக
ஆசைப்பட்டால் தனிமையில்
இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
தனிமை நிச்சயம் உங்களை பலமாக மாற்றும்.
தனிமை இன்பமானது
தனிமை கொடுமையானது
தனிமையில் இனிமை காணப் பழகிவிட்டால்
அது ஒரு தனி உலகம்