தொப்புள் கொடி
அறுக்கும் முன்னே
குரல்வளை நெறிக்கக்
காத்திருக்கும்
கொடுங்கரங்கள்…!!
தாய்ப்பால் மறக்கும் முன்னே
காமப் பால் ஊற்றி
சுவை பார்க்கத்
துடித்திருக்கும் விஷ நாவுகள்…!!
நடை பழகும் முன்னே
நடை பிணமாக்கி
நசுக்கிக் கொல்லும்
வன்புணர்வுகள்…!!
பூக்கும் முன்னே
சீரழித்து சிதைக்கப்படும்
சின்னஞ்சிறு மலர்கள்…!!
கன்னியென்றே
அறியுமுன்னே
கருசுமக்க வைக்கப்படும்
அவலங்கள்…!!
கரங்களைக் கட்டி
யோனி கிழித்து
மார்பு அறுத்து
பெருகும் குருதியில்
நனைந்து கிடக்கும்
எங்களுக்கு…!!
எப்பொழுது
சுதந்திரமென்று
கொஞ்சம்
சொல்லிச் செல்லுங்கள்…!!
No Comment! Be the first one.