தன்னம்பிக்கையே இனிமையான எதிர்காலத்தை உருவாக்குகிறது!
தூய்மையான மனசாட்சி இடி முழக்கத்தின் அச்சமின்றி துயிலும்!
துணிச்சலாக நேர் வழியில் வாழ்ந்தால் பிரச்சினைகளும் கவலைகளும் மட்டுமல்ல, எதிரிகளும் அமைதியாகி விடுவார்கள்.
நம்முடைய வயது என்பது சாதாரண ஒரு எண் தான்! செயல்படுவதற்கு மனம் இளமையாக இருக்க வேண்டும். அது போதும்!
வெற்றி வேண்டுமா? கவலை, நோய் முதலியவற்றை பொறுத்துக்கொண்டு நீடித்து உழையுங்கள்.
மனசாட்சியை ஏமாற்றாமல் வாழ்பவனே உண்மையான வீரன். அவனது வெற்றி உறுதியானது!
தவறுகளை ஒப்புக்கொள்ளும் துணிவும், திருத்திக் கொள்ள விரும்பும் விருப்பமும் தான் வெற்றி பெறுவதற்கான வழிகள்.
நோயை தொடக்கத்திலேயே குணப்படுத்துங்கள். கடனை சிறியதாக இருக்கும் போதே செலுத்திவிடுங்கள்.